Theme Check

அரிவாளை பிடிங்கி மகனை வெட்டிக்கொன்ற தந்தை.. நீதிமன்ற வளாகத்தில் நடந்த பயங்கரம் !!

அரிவாளை பிடிங்கி மகனை வெட்டிக்கொன்ற தந்தை.. நீதிமன்ற வளாகத்தில் நடந்த பயங்கரம் !!

அரிவாளை பிடிங்கி மகனை வெட்டிக்கொன்ற தந்தை.. நீதிமன்ற வளாகத்தில் நடந்த பயங்கரம் !!
X

சொத்துப் பிரச்சனை காரணமாக தந்தையை வெட்ட வந்த மகன் போலீசார் முன்னிலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கவர்னகிரி சுந்தரலிங்கம் நகரில் தமிழ் அழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது மகன் காசிராஜனுக்கும் ஏற்கனவே சொத்துப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவ்வப்போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், குடும்பத்தினர் சமாதானம் செய்துவந்தனர்.

இதையடுத்து காசிராஜன், தனது தந்தை மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜராவதற்காக இன்று காலை தமிழ் அழகன், அவரது சகோதரர் கடல் ராஜா மற்றும் உறவினர் ஆகியோர் நீதிமன்றம் வந்துள்ளார். வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தல் ஆஜராகி விட்டு நீதிமன்றம் எதிரே உள்ள பகுதிக்கு நடந்துசென்றுள்ளனர்.

dff

அப்போது அங்கு வந்த காசிராஜன், தன்னுடைய தந்தை உள்ளிட்ட 3 பேரையும் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதில் சுதாரித்துக் கொண்ட தமிழ் அழகன், கடல் ராஜா, காசிதுரை ஆகியோர் காசிராஜனிடம் இருந்து தப்பித்தனர். மேலும் அவரிடம் இருந்து அரிவாளை பிடிங்கி காசிராஜனை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.

இதனால் நீதிமன்றம் மற்றும் காவல்நிலையம் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொலை தொடர்பாக மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடியில் நீதிமன்றம் மற்றும் காவல் நிலையம் எதிரே நடந்த இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Next Story
Share it