Theme Check

மருத்துவருக்கு பளார் விட்ட பெண் செவிலியர்! பணியின் போது பகீர் சம்பவம் !!

மருத்துவருக்கு பளார் விட்ட பெண் செவிலியர்! பணியின் போது பகீர் சம்பவம் !!

மருத்துவருக்கு பளார் விட்ட பெண் செவிலியர்! பணியின் போது பகீர் சம்பவம் !!
X

மாவட்ட அரசு மருத்துவமனையில் பெண் செவிலியர் மற்றும் மருத்துவர் சரமாரியாக தாக்கி கொள்ளும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தீவிரம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும் வடமாநிலங்கள் திணறி வருகின்றன. சுகாதார கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் உயிரிழப்புகள் அதிகரித்தும், சடலங்களை எரிக்க வழியில்லாமலும் திணறி வருகின்றன. 24 மணி நேரமும் தகனமேடை மற்றும் பொதுஇடங்களில் உடல்கள் எரிந்துகொண்டு தான் இருக்கின்றன.

அதேநேரத்தில், கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். குறிப்பாக, உத்திர பிரதேசத்தில் கொரோனா பெருந்தொற்று காட்டுத் தீயாய் பரவி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ கட்டமைப்பு முறையாக இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.

அங்குள்ள ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதாவது மருத்துவர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செவிலியர் மருத்துவரின் கன்னத்தில் அறைந்தார். இதனால் கோபமடைந்த மருத்துவர் அந்த பெண் செவிலியரை திருப்பி தாக்கியதில் மருத்துவமனை களேபரம் ஆனது.

பெண் செவிலியர் மற்றும் மருத்துவர் ஆகிய இருவரும் மாறி மாறி தாக்கிக்கொள்ள முற்பட்டனர். எனினும் அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். பின்னர் இது குறித்து மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார்.

அப்போது பணிச்சுமை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தமே மோதலுக்கு காரணம் என்று இருவரும் கூறியுள்ளனர். மருத்துவர்கள் செவிலியர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகி மோதலில் ஈடுபட்டிருப்பது அங்கு மேலும் சிக்கலை அதிகரித்துள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it