படம் வெளியான 16 நாட்களிலேயே ஓ.டி.டி.யில் ரிலீஸ் !!
படம் வெளியான 16 நாட்களிலேயே ஓ.டி.டி.யில் ரிலீஸ் !!

தமிழ் திரையுலகில் தளபதியாக பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவரின் மாஸ்டர் படமே 10 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்களில் ரசிகர்களை வரவழைத்த படம். இந்தப் படத்தை ஏற்கனவே ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தியேட்டர் அதிபர்கள் கோரிக்கையை ஏற்று பொங்கல் பண்டிகையில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் அதிக அளவில் தியேட்டர்களில் வந்து மாஸ்டர் படத்தை பார்த்ததில் வசூலிலும் சாதனையும் படைத்தது. .
தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் 50 நாட்களுக்கு பிறகே ஓ.டி.டி.யில் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் மாஸ்டர் 16 நாட்களிலேயே ஓ.டி.டி.யில் வெளியாக இருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பையும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சூர்யாவின் சூரரை போற்று, விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், ஜெயம் ரவி நடித்துள்ள பூமி, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின் போன்ற பல படங்கள் நேரடியாக ஓ.டி.டி. தளங்களில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

