Theme Check

இந்திய விமானப் படையில் முதல் பெண் போர் விமானி.. சாதித்த அபிலாஷா !!

இந்திய விமானப் படையில் முதல் பெண் போர் விமானி.. சாதித்த அபிலாஷா !!

இந்திய விமானப் படையில் முதல் பெண் போர் விமானி.. சாதித்த அபிலாஷா !!
X

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானி பெருமையை பெற்று நாட்டுக்கு பணியாற்ற வந்துள்ளார் வீரமங்கை அபிலாஷா பராக்.

பிரிட்டன் ராணுவத்தின் ராயல் விமானப் படை, நம் நாட்டில் ராணுவ விமானப் பிரிவு 1942ஆம் ஆண்டு தனியாக துவங்கியது. இதன் முதல் விமானம் 1947ல் இயங்க துவங்கியது. நம் ராணுவத்துக்கான பிரத்யேக விமானப் படை 1986ல் துவக்கப்பட்டது. இதில், போர் விமானியாக பெண்கள் இருந்ததில்லை.

அபிலாஷா பராக்

இந்நிலையில், நம் ராணுவ விமான படையில் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பராக் நேற்று பொறுப்பேற்றார். பயிற்சி முடித்த 36 ராணுவ விமானிகளுடன் அபிலாஷாவும் நேற்று பொறுப்பேற்றார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள போர் விமானிகள் பயிற்சி பள்ளியில் பயிற்சியை முடித்துள்ளார்.

அவருக்கு பயிற்சி நிறைவு பதக்கத்தை ராணுவ வான்பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சூரி அணிவித்தார். அபிலாஷா பராக், அரியானா மாநிலம், பஞ்ச்குலாவை சேர்ந்தவர். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராணுவ வான்பாதுகாப்பு படையில் சேர்ந்தார்.

அபிலாஷா பராக்

இவரது தந்தை இந்திய ராணுவத்தில் காஷ்மீரில் கர்னலாக பதவி வகித்து ஓய்வு பெற்ற ஓம் சிங் ஆவார். ராணுவ வான்பாதுகாப்பு படையில் சேருவதற்கு முன்னர் கேப்டன் அபிலாஷா, தொழில் ரீதியில் நிறைய ராணுவ படிப்புகளை படித்துள்ளார். தந்தை வழியில் மகளும் நாட்டுக்காக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it