Theme Check

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. எந்த நாளில் வருகிறது தெரியுமா..?

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. எந்த நாளில் வருகிறது தெரியுமா..?

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. எந்த நாளில் வருகிறது தெரியுமா..?
X

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வருகிற 30-ம் தேதி நிகழ உள்ளது. இந்த கிரகணம் பகுதி சூரிய கிரகணமாக நள்ளிரவில் நிகழ்வதால், இந்தியாவில் இதை பார்க்க முடியாது.

இந்திய நேரப்படி, வரும் 30ம் தேதி நள்ளிரவு 12.15 மணிக்கு தொடங்கி, மறுநாள் அதிகாலை 4.08 மணி வரை இந்த சூரிய கிரகணம் நீடிக்கும்.

அண்டார்டிகா, அட்லாண்டிக் பகுதி, பசிபிக் பெருங்கடல், தென் அமெரிக்காவின் தென் மேற்கு பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

இந்த ஆண்டிற்கான இரண்டாவது சூரிய கிரகணம் வருகிற அக்டோபர் மாதம் 25-ம் தேதி நிகழ்கிறது. இதுவும் பகுதி சூரிய கிரகணம் என்பதால், இந்தியாவில் தெரியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it