Theme Check

விளையாட்டு விணையானது.. ரயில் மீது ஏறிய சிறுவன் பலி !!

விளையாட்டு விணையானது.. ரயில் மீது ஏறிய சிறுவன் பலி !!

விளையாட்டு விணையானது.. ரயில் மீது ஏறிய சிறுவன் பலி !!
X

ரயில் கூரை மீது ஏறி செல்ஃபி எடுத்த மாணவர்களில் ஒருவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை கோட்டத்தில் பெரும்பாலான ரயில்கள் மின்மயமாக்கப்பட்டு மின்சார ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. அந்த மின் பாதையில் ரயில் இயக்குவதற்காக 25000 வோல்ட் மின்சாரம் செல்கிறது. மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் இருப்பதால் சரக்கு ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் நிறுத்திவைக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் அந்த ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள முல்லை நகரை சேர்ந்த பழனி என்பவரின் 17 வயது மகன் விக்னேஸ்வர் தனது நண்பர்களுடன் அங்கு விளையாடியுள்ளான். அப்போது ஆபத்தை உணராமல் நின்றுக்கொண்டிருந்த பயணிகள் ரயில் பெட்டியின் மீது ஏறி விளையாடி உள்ளார்.

sdaf

யாரும் எதிர்பாராத விதமாக விக்னேஸ்வர் மீது 25000 வோல்ட் மின்சாரம் பாயும் மின்கம்பியில் உரசி தூக்கிவீசப்பட்டு உடல் கருகி படுகாயமடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரயில்வே பணியாளர்கள், உடனடியாக சிறுவனை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Next Story
Share it