Theme Check

இலங்கையை சேர்ந்தவரை தாக்கி தீ வைத்து எரித்த கும்பல்!!

இலங்கையை சேர்ந்தவரை தாக்கி தீ வைத்து எரித்த கும்பல்!!

இலங்கையை சேர்ந்தவரை தாக்கி தீ வைத்து எரித்த கும்பல்!!
X

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இலங்கையை சேர்ந்த ஒருவரை நூறுக்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய கும்பல் கொடூரமாக தாக்கி, அவரை தீயிட்டு எரித்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையை சேர்ந்த அவரது பெயர் பிரியந்தா குமாரா என தெரியவந்துள்ளது. அங்கு சியால்கோட் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலை ஒன்றில் பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

தெஹ்ரீக்--லப்பைக் பாகிஸ்தான்என்ற அரசியல் அமைப்பின் போஸ்டரை அவர் கிழித்து, குப்பைத்தொட்டியில் வீசியதாக கூறப்படுகிறது. அந்த போஸ்டர் அவரது அலுவலகத்திற்கு பக்கத்தில் இருந்த சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்தது.

sri-lankan-manager

அதை அவர் கிழித்த போது அதே தொழிற்சாலையில் பணியாற்றி வரும் இருவர் அதனை பார்த்தனர். பின்னர் அந்த தகவல் செவி வழி செய்தியாக பரவியதாக தெரிகிறது.

இதையடுத்து அவர் பணியாற்றி வந்த இடத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரை கொடூரமாக தாக்கினர். தொடர்ந்து அவர் எரித்துக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் இது பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள் என தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it