Theme Check

அதிமுக பிரமுகரை வெட்டி தூக்கிவீசிய கும்பல்.. பட்டபகலில் பயங்கரம் !!

அதிமுக பிரமுகரை வெட்டி தூக்கிவீசிய கும்பல்.. பட்டபகலில் பயங்கரம் !!

அதிமுக பிரமுகரை வெட்டி தூக்கிவீசிய கும்பல்.. பட்டபகலில் பயங்கரம் !!
X

அதிமுக பிரமுகரை பட்டப்பகலில் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பாறைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (45). இவர் அதிமுக விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை தலைவராக பொறுப்பு வகித்து தற்போது நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று சத்தியமூர்த்தி திருச்சுழி மாரியம்மன் கோவில் பின்புறம் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென அங்குவந்த ஒரு கும்பல் அவரை ஆயுதங்களுடன் சூழ்ந்தது. அவர் தப்பியோட முயன்றப்போதும்மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

admk

அதோடு அவரை சாலையோரத்தில் தூக்கிவிசியதால் யாருக்கும் அவர் தெரியவில்லை. சுமார் அரை மணி நேரம் புதருக்குள் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அவரை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து திருச்சுழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சத்தியமூர்த்தியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் திருச்சுழி நகர்ப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது, மேலும் சத்தியமூர்த்தியை அரிவாளால் வெட்டிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it