பார்லரில் வேலை எனக்கூறி சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்!!
பார்லரில் வேலை எனக்கூறி சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்!!

வெளிமாநிலத்தில் இருந்து சிறுமிகளை அழைத்துவந்து சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் உள்ளிட்ட இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.
பாரிமுனையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் ஒரு பெண் உட்பட 4 பேர், 4 சிறுமிகளுடன் சந்தேகிக்கும்படி தங்கியுள்ளதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் பூக்கடை மகளிர் காவல் நிலையய ஆய்வாளர் தலைமையில் போலீஸார் ஆய்வு செய்தனர்.
அப்போது திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சலீமா கத்தூன் என்ற பெண் மைனுதீன், அலாவுதின் ஆகியோருடன் சேர்ந்து திரிபுராவில் இருந்து 4 சிறுமிகளை அழைத்து வந்ததும் காவல் துறையினரை கண்டதும் சலீமாவின் கணவர் அன்வர் உசேனுன், மைனுதீனும் தப்பியோடியதும் தெரிய வந்தது.

விசாரணையில் திரிபுராவில் சிறுமியிடம் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகவும், மற்ற மூன்று சிறுமிகளிடம் அழகு நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் ஏமாற்றி சென்னைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.
இதனையடுத்து போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த பூக்கடை போலீஸார், சலீமா கத்தூனையும், அலாவுதினையும் (23) கைது செய்து அவர்களிடம் இருந்த 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீஸார் தலைமறைவான அன்வர் உசேன், மைமுதினையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
newstm.in

