Theme Check

பெண்களை நிர்வாணமாக்கி கடைவீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்ற கும்பல்!!

பெண்களை நிர்வாணமாக்கி கடைவீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்ற கும்பல்!!

பெண்களை நிர்வாணமாக்கி கடைவீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்ற கும்பல்!!
X

நான்கு பெண்களை நிர்வாணமாக்கி அவர்களை குச்சியால் அடித்து கும்பல் ஒன்று கடைவீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் ஃபைசலாபாத் நகரில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. பதின்பருவத்தைச் சேர்ந்த பெண் உட்பட நான்கு பெண்களை நிர்வாணமாக்கி, குச்சிகளால் அடித்து தர தரவென ஊர்வலமாக இழுத்து செல்கின்றனர்.

அந்த பெண்கள் சுமார் ஒரு மணி நேரம் இந்த கொடூரத்தை அனுபவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பஞ்சாப் மாகாண போலீசார் இதில் தொடர்புடைய சிலரை கைது செய்துள்ளனர்.

அன்றைய தினம் பாவா சாக் மார்க்கெட்டுக்கு பெண்கள் குப்பை பொருட்களை சேகரிக்க சென்றனர். மிகவும் தாகமாக இருந்ததால் அங்குள்ள கடையில் தண்ணீர் கேட்டுள்ளனர். ஆனால் தங்களை திருடர்கள் என நினைத்து கடைக்காரர் ஒருவர் தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.

pak

தங்களை குண்டுக்கட்டாக தூக்கி ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி, குச்சிகளால் அடித்து சாலைகளில் ஊர்வலமாக கூட்டிச் சென்றனர். அங்கிருந்த ஒருவர் கூட எங்களுக்கு உதவவில்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் இதுபோன்று கும்பலாக தாக்கும் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சியால்கோட் நகரில் தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாக கூறி இலங்கையைச் சேர்ந்த நபரை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்து சாலையில் வைத்து எரித்த சம்பவம் சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது.

newstm.in

Next Story
Share it