Theme Check

மாடல் அழகியை 3 நாட்கள் அடைத்துவைத்து பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் !

மாடல் அழகியை 3 நாட்கள் அடைத்துவைத்து பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் !

மாடல் அழகியை 3 நாட்கள் அடைத்துவைத்து பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் !
X

மாடல் அழகிகள் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வெளியிடுவர். அதன்மூலம் புதிய பட வாய்ப்புகளுக்காகவும் போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம். அந்த வகையில், கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த இளம் மாடல் அழகி ஒருவர் பிரபலமானார்.

இவர் விளம்பரத்திற்கு போட்டோ ஷூட் எடுப்பதற்காக ஆலப்புழாவை சேர்ந்த சலீம்குமார்(33) என்பவரை அணுகியுள்ளார். அவர் கொச்சியின் இடத்திரா பகுதியில் உள்ள லாட்ஜில் போட்டோ ஷூட் எடுப்பதாகவும் அங்கு வரவேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி மாடல் அழகியும் அங்கு செல்ல முடிவு செய்தார்.

rape

இதையடுத்து கடந்த 1ஆம் தேதி மாடல் அழகியை அழைத்து கொண்டு லாட்ஜிக்கு சென்றார். அங்கு போட்டோ ஷூட் எடுப்பதற்கு முன்பு சலீம்குமார் அவருக்கு ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதை தெரியாமல் குடித்த மாடல் அழகி மயங்கி விட்டார். இதையடுத்து மாடல் அழகியை சலீம்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவரது நண்பர்கள் ஷமீர், அஜ்மல் ஆகியோரும் சேர்ந்து அவரை பலாத்காரம் செய்துள்ளனர். தொடர்ந்து 3 நாட்கள் அங்கு அடைத்துவைத்து இக்கொடூரம் நடந்துள்ளது. பின்னர் மாடல் அழகியை விடுத்துள்ளனர்.

rape

பாதிக்கப்பட்ட அவர் தனக்கு நடந்த கொடுமை குறித்து கொச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சலீம்குமாரை கைது செய்தனர். ஷமீர், அஜ்மல் மற்றும் லாட்ஜ் உரிமையாளரான பெண் ஆகிய மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.


newstm.in

Tags:
Next Story
Share it