மகளை காதலித்த இளைஞரின் அந்தரங்க உறுப்பு துண்டிப்பு.. கொன்றவர் வீட்டின் முன்பு உடலை தகனம் செய்த உறவினர்கள் !!
மகளை காதலித்த இளைஞரின் அந்தரங்க உறுப்பு துண்டிப்பு.. கொன்றவர் வீட்டின் முன்பு உடலை தகனம் செய்த உறவினர்கள் !!

பீகார் மாநிலம் முசாபர்பூர் அடுத்த ரெபுரா ராம்புர்ஷா கிராமத்தில் சவுரப் குமார் (18) என்ற இளைஞர் பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் அதேபகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்ணின் பெற்றோர் சவுரப் குமாரை பலமுறை கண்டித்துள்ளனர். எனினும் அவர்களின் காதல் தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இருவரும் தனியாக பேசிக் கொண்டிருந்ததை பெண்ணின் பெற்றோர் நேரில் பார்த்தனர். அவர்கள், சவுரப் குமாரை பிடித்து சரமாரியாக தாக்கினர். அங்கு திரண்ட பெண்ணின் மேலும் சில உறவினர்களும் சேர்ந்து சவுரப் குமாரை அடித்து உதைத்தனர்.

இதில் காயமுற்று மயங்கிய சவுரப் குமாரின் ஆணுறுப்பை கத்தியால் வெட்டிவிட்டு பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தப்பிவிட்டனர். இதனை அறிந்து அங்கு சென்ற சவுரப் குமாரின் உறவினர்கள், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோதும் சிகிச்சை பலனின்றி சவுரப் குமார் இறந்தார்.
இச்சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார், இந்த கொடூர கொலையில் தொடர்புடைய சுஷாந்த் மற்றும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனிடையே இளைஞரின் உறவினர்கள், கொலை செய்தவரின் வீட்டின் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது உடற்கூராய்வுக்கு பிறகு இளைஞரின் உடலை கொலை செய்தவரின் வீட்டின் முன்பு வைத்து பின்னர் விறகுகளை அடுக்கி தகனம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
newstm.in

