காதலனை கட்டிப்பிடித்து முத்தம்கொடுத்து துப்பாக்கியால் சுட்ட இளம்பெண்.. பெரும் அதிர்ச்சி !
காதலனை கட்டிப்பிடித்து முத்தம்கொடுத்து துப்பாக்கியால் சுட்ட இளம்பெண்.. பெரும் அதிர்ச்சி !

மேற்கு வங்க மாநிலத்தின் பூர்பா பர்தமான் மாவட்டத்தில் 22 வயது இளம்பெண் அதேபகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாக தெரிகிறது. இதனால் இளைஞர் தனது காதலியிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். எனினும் அப்பெண் காதலில் உறுதியாக இருந்துள்ளார்.

பின்னர் பேசித்தீர்க்க இருவரும் முடிவு செய்தனர். அதன்படி ஜார்கண்டில் வேலையில் இருந்த இளைஞர் தனது காதலியிடம் பேசி பிரச்னையை தீர்க்க ஊருக்கு சென்றுள்ளார். அங்குள்ள உள்ளூர் சர்க்கஸ் மைதானத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். அப்போது அப்பெண் தனது காதலனை கட்டிப்பிடித்து, முத்தமிட்டார். இதனையடுத்து இருவரும் புகைப்பிடித்தனர்.
இந்த நிலையில், பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென அப்பெண் தனது காதலனை நோக்கி துப்பாக்கியை நீட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த காதலன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தார். எனினும் அப்பெண் காதலனை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் மீது குண்டுபாயவில்லை. எனினும் அச்சம் காரணமாக அப்பெண் தப்பியோடிய நிலையில், இது குறித்து இளைஞர் போலீசில் புகார் அளித்தார்.

பின்னர் அப்பெண் கைது செய்யப்பட்டாள். அவளிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. முதற்கட்ட விசாரணையின்படி, கடந்த சில மாதங்களாக இருவருக்குமிடையே இடைவெளி அதிகரித்துள்ளதால் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரி தெரிவித்தார்.
newstm.in

