Theme Check

தன்னைத் தானே திருமணம் செய்து ஹனிமூன் செல்ல உள்ள பெண்!!

தன்னைத் தானே திருமணம் செய்து ஹனிமூன் செல்ல உள்ள பெண்!!

தன்னைத் தானே திருமணம் செய்து ஹனிமூன் செல்ல உள்ள பெண்!!
X

இளம் பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டு ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த இளம் பெண் ஷாமா பிந்து தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஆண்களைத் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை. ஆனால் மேடையில் மணப்பெண்ணாக இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

இதனால் திருமணத்திற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளுடன் ஜூன் 11ஆம் தேதி தன்னைத்தானே உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளபோகிறார். இதற்காக பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து வருகிறார்.

shama 1

ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களை நேசிப்பவர்களை திருமணம் செய்து கொள்கின்றனர். நான் என்னை மட்டும்தான் நேசிக்கிறேன். அதனால் என்னை நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

இப்படி ஒரு திருமணம் இதற்கு முன்பு எங்காவது நடந்துள்ளதா என்று இணையத்தில் தேடிப்பார்த்தேன். ஆனால் அப்படி ஒரு தகவலும் எனக்கு கிடைக்கவில்லை ஷாமா பிந்து கூறியுள்ளார்.

kshamachy

எனது திருமணத்தைப் பலரும் முட்டாள் தனம் என்று கூட நினைக்கலாம். ஆனால் எனது பெற்றோர்கள் இந்த திருமணத்திற்குச் சம்மதம் கொடுத்து வாழ்த்தியுள்ளனர். திருமணத்தை முடித்து தேனிலவுக்கு கோவா செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it