Theme Check

21ஆவது மாடியில் இருந்து குதித்த இளம்பெண்.. பகீர் பின்னணி !!

21ஆவது மாடியில் இருந்து குதித்த இளம்பெண்.. பகீர் பின்னணி !!

21ஆவது மாடியில் இருந்து குதித்த இளம்பெண்.. பகீர் பின்னணி !!
X

அடுக்குமாடி குடியிருப்பின் 21ஆவது மாடியில் இருந்து பெண் தோழியுடன் ஒன்றாக வசித்துவந்த பொறியாளரும் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கவுதம் புத் நகரின் தானா பிஸ்ராக் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பொறியாளர் அஜய் குமார் (28), அவரது பெண் தோழி குமாரி பிராச்சி (28) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்தது அக்கம்பக்கத்தினரிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.
love

இந்நிலையில் அஜய் குமார், குமாரி பிராச்சி ஆகிய இருவரும் 21ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்த போலீசார் அங்கு சென்று இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணைக்கு பின் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், பரஸ்பர சம்மதத்துடன் ஒன்றாக சேர்ந்து ஒரே வீட்டின் வாழ்ந்து வந்துள்ளனர். சம்பந்தப்பட்ட குடியிருப்பில் சோதனை நடத்தியபோது, இருவரும் தற்கொலைக் குறிப்பு எதுவும் எழுதி வைக்கவில்லை. காதல் விவகாரமா? திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்ததால், அவர்களுக்குள் ஏதேனும் பிரச்சனையா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

love

சம்பவம் குறித்து இருதரப்பு பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்தால், காவல்துறை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

newstm.in

Tags:
Next Story
Share it