Theme Check

70 ரூபாய் திருடிய சிறுமி.. விபரீத தண்டனை கொடுத்த தாய்.. இறுதியில் நடந்த சோகம்..!

70 ரூபாய் திருடிய சிறுமி.. விபரீத தண்டனை கொடுத்த தாய்.. இறுதியில் நடந்த சோகம்..!

70 ரூபாய் திருடிய சிறுமி.. விபரீத தண்டனை கொடுத்த தாய்.. இறுதியில் நடந்த சோகம்..!
X

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா; இவருடைய மனைவி மணிமேகலை. இந்தத் தம்பதியின் மூத்த மகள் மகாலட்சுமி (10).

சிறுமி மகாலட்சுமி, அடிக்கடி தன் பெற்றோரிடம் இருந்து அவர்களுக்கு தெரியாமல் பணத்தை எடுத்து, அதில் திண்பண்டங்கள் வாங்குவார் என்றும், இதனால், மகளை மணிமேகலை கண்டித்து வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி தன் மாமா முருகன் வீட்டுக்குச் சென்ற சிறுமி மகாலெட்சுமி, அங்கு 70 ரூபாயை திருடியதாக மணிமேகலையிடம் முருகன் கூறியுள்ளார்.

இதையடுத்து, சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்து வந்து, தண்டனையாக, சுடுநீரில் மிளகாய் பொடியை கலந்து நுகரச் செய்துள்ளார் மணிமேகலை. மேலும், சிறுமியின் வாய் மற்றும் தொடையில் சூடு போட்டுள்ளார்.

மிளகாய் பொடியை நுகர்ந்ததால் இரண்டு நாட்களாக சாப்பிட முடியாத நிலையில் இருந்த சிறுமி மகாலட்சுமி, நேற்று (9ம் தேதி) திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, சிறுமியின் தாய் மணிமேகலை கைது செய்யப்பட்டார்.

Next Story
Share it