வேலைக்கு சென்ற தோழி - தனியாக இருந்த இளம்பெண் கொலை.. காதலனுக்கு வலைவீச்சு?
வேலைக்கு சென்ற தோழி - தனியாக இருந்த இளம்பெண் கொலை.. காதலனுக்கு வலைவீச்சு?

காஞ்சிபுரத்தில் தனியாக வீட்டில் இருந்த இளம்பெண் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல் மற்றும் கண்ணத்தில் கீறல்கள் இருக்கும் நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். படப்பை அருகேயுள்ள ஆதனஞ்சேரி பகுதியில் ஒரு வீட்டில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கரீனா பிரியதர்ஷினி (21) மற்றும் ரஞ்சிதா (22) ஆகிய இருவரும் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இருவரும் ஒரகடம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ரஞ்சிதா வேலைக்கு சென்றுவிட கரீனா பிரியதர்ஷினி மட்டும் தனியாக இருந்துள்ளார். ரஞ்சிதா வேலை முடிந்து வந்து பார்த்தப்போது கரீனா பிரியதர்ஷினி பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததால் அதிர்ச்சியடைந்து உடனே 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் வந்து பரிசோதித்து பார்த்துவிட்டு கரீனா இறந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இறந்த பெண்ணின் உடல் மற்றும் கண்ணத்தில் கீறல்கள் மற்றும் கழுத்து சிவந்த நிலையில் இருந்ததால், இளம்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இறந்த பெண் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணிஷ் என்பவரை காதலித்து வந்ததும், அவர் இப்பெண்ணை கொலை செய்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இளம் கொலைக்கு காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

