Theme Check

பெண் குழந்தையின் கை, கால்களை கட்டி உச்சி வெயிலில் வீட்டின் மேற்கூரையில் வீசி சித்ரவதை !!

பெண் குழந்தையின் கை, கால்களை கட்டி உச்சி வெயிலில் வீட்டின் மேற்கூரையில் வீசி சித்ரவதை !!

பெண் குழந்தையின் கை, கால்களை கட்டி உச்சி வெயிலில் வீட்டின் மேற்கூரையில் வீசி சித்ரவதை !!
X

தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியான காராவால் நகரின், துக்மிர்பூர் என்ற பகுதியில் திருமணமான பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் குழந்தையின் தாய் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது, டெல்லியில் ஒரு வீட்டின் மேற்கூரையில் 5 வயது பெண் குழந்தையின் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கொளுத்தும் வெயிலில் படுத்திருக்கும் வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 25 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், குழந்தையின் கதறல் சத்தம் பார்ப்பவர்களின் மனதை பதற வைத்துள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பலரும் சம்பந்தப்பட்ட தாயின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி காவல்துறையினருக்கு சமூகவலைத்தளம் மூலமாக வலியுறுத்தினர்.

df

அந்தக் குழந்தை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் கதற, கதற தாயே இந்தக் கொடுமையை நிகழ்த்தியுள்ளார். இந்த வீடியோ, புகைப்படங்கள் அடிப்படையில் இடத்தை அடையாளம் கண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது வீட்டின் மொட்டை மாடியில் கொளுத்தும் வெயில், தரையில் கொதிக்கும் சூட்டில் பெரும் கொடுமையை அனுபவித்த குழந்தையை போலீசார் மீட்டனர். விசாரணையில், சித்ரவதைக்குள்ளான குழந்தை 1ஆம் வகுப்பு மாணவி என்பதும், வீட்டு பாடம் எழுதாததால், இப்படி ஒரு கொடூர தண்டனையை தாய் கொடுத்துள்ளதும் தெரியவந்தது.

இது குறித்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it