Theme Check

மகளுக்கு திருமணம் செய்து வைத்தவரை கொலை செய்ய பெண்ணின் பெற்றோர் முயற்சி!!

மகளுக்கு திருமணம் செய்து வைத்தவரை கொலை செய்ய பெண்ணின் பெற்றோர் முயற்சி!!

மகளுக்கு திருமணம் செய்து வைத்தவரை கொலை செய்ய பெண்ணின் பெற்றோர் முயற்சி!!
X

காதலித்த தங்கள் மகளுக்கு அதே பையனுடன் திருமணம் செய்து வைத்த நபரை, பெண்ணின் பெற்றோர் கூலிப்படை வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அனிருதன் – அஜிதா தம்பதிக்கு ஜெனட் என்ற மகள் உள்ளார். இவர் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் ஜெனட் நெருங்கிய உறவினரான ஸ்வரூப என்பவரை காதலித்து வந்துள்ளார்.

ஆனால் இவர்களின் காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து அறிந்த ஜெனட் பெற்றோர் இவர்களுக்கு யார் திருமணம் செய்து வைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

kl

அதில் உறவினர் ரினீஸ் என்பவர் மகளுக்குத் திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ரூ.2.5 லட்சம் கொடுத்து கூலிப்படையை ஏவி ரினிஸை கொலை செய்ய முயற்சித்தனர்.

ரினிஸை கூலிப்படை கும்பல் கொடூரமாகத் தாக்கியதை அடுத்து பொதுமக்கள் அவர்களிடமிருந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

arrest

இதையடுத்து கூலிப்படை ஏவி கொல்ல முயன்ற ஜெனட்டின் பெற்றோரை போலீஸார் கைது செய்தனர். மேலும் பதுங்கியிருந்த கூலிப்படை கும்பலைச் சேர்ந்த சுபாஷ் பென்னி, அருண், அஸ்வந்த், அவினாஷ், பாலு பிரனவ் ஆகியோரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it