Theme Check

கல்லூரியில் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது..!! மதுரையில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!

X

கர்நாடக மாநில கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இதையடுத்து, ‘ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல. எனவே கல்வி நிலையங்களில் ஹிஜாப்புக்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்' என செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. கர்நாடகாவில் இஸ்லாமியர்கள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்திலும் இரண்டு நாட்களாக ஒரு சில இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மதுரையில் வகுப்பு வாரிய கல்லூரியில் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக கர்நாடக அரசு செயல்படுகிறது என்று கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
Share it