Theme Check

தொழில் தொடங்க அரசு வழங்குது ரூ.10 லட்சம்.. இதற்கு எப்படி விண்ணபிப்பது..?

தொழில் தொடங்க அரசு வழங்குது ரூ.10 லட்சம்.. இதற்கு எப்படி விண்ணபிப்பது..?

தொழில் தொடங்க அரசு வழங்குது ரூ.10 லட்சம்.. இதற்கு எப்படி விண்ணபிப்பது..?
X

தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்ரா திட்டத்தின் கீழ், சொந்தமாக தொழில் தொடங்க விரும்புவோர் ரூ. 10 லட்சம் வரை கடன் பெறலாம். அது எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என அழைக்கப்படும் இந்த திட்டத்தில் நீங்கள் கடன் பெற வேண்டும் என்றால், வீட்டின் உரிமை அல்லது வாடகை ஆவணங்கள், வேலை தொடர்பான தகவல்கள், ஆதார் அட்டை, பான் எண் போன்ற ஆவணங்கள் மட்டுமே போதுமானது.
Mudra Loan - Mudra Nidhi
இதைத்தான் வங்கியில் அடையாள ஆவணங்களாக சமர்பிக்க வேண்டும். அருகில் உள்ள வங்கிக் கிளையைத் தொடர்பு கொண்டு, அவர்களிடம் இது குறித்த விவரங்களை கேட்டறிந்து, மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை வங்கியிடம் வழங்கி கடனுக்கு விண்ணப்பிக்கலாம். வங்கி தரப்பில் ஃபார்ம் ஒன்று வழங்கப்படும். அதை நீங்கள் நிரப்ப வேண்டும்.

முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வாங்குபவர்கள் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். சிஷோ, கிஷோர் பிரிவு, தருண் பிரிவு. இவர்கள் முறையே ரூ.50,000, ரூ. 50,000 முதல் ரூ. 5 லட்சம் , ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் பெற முடியும். அதற்கான அளவுகோலை வங்கிகள் முடிவு செய்யும்.
Pradhan Mantri MUDRA Yojana: How to apply? Check your eligibility - The  Statesman
இந்த கடன் தொகைக்கு பிணையாக எந்த ஒரு சொத்து சம்பந்தப்பட்ட சான்றிதழ்களும் சமர்ப்பிக்கப்பட தேவையில்லை. முத்ரா யோஜனா திட்டத்தில் நிலையான வட்டி விகிதம் இல்லை. வெவ்வேறு வங்கிகள் முத்ரா கடன்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை விதிக்கலாம்.

நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க நினைத்தாலும் அல்லது சிறு குறு தொழில் செய்ய விரும்பினாலும் ஈஸியாக மத்திய அரசு தரும் இந்த முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் வரை எளிமையாக கடன் பெற்று விரும்பிய தொழிலை செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் பல தொழில் முனைவோர்கள் உருவாகி வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it