Theme Check

3 குழந்தை பெற்றுக்கொள்ளச் சொல்லும் அரசு... எதிர்க்கும் மக்கள்!!

3 குழந்தை பெற்றுக்கொள்ளச் சொல்லும் அரசு... எதிர்க்கும் மக்கள்!!

3 குழந்தை பெற்றுக்கொள்ளச் சொல்லும் அரசு... எதிர்க்கும் மக்கள்!!
X

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை சரிந்து வருவதால், ஒருதம்பதி குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

மக்கள் தொகையில், உலகளவில் முதலிடத்தில் இருக்கும் சீனாவில் தற்போது மக்கள் தொகை வளர்ச்சி சரிவில் சென்று கொண்டிருப்பதால், தம்பதிகளை வலுக்கட்டாயமாக குழந்தை பெற்றுக்கொள்ள நிர்பந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் தொகைப் பெருக்கத்தைக் குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை சீன அரசு கடைபிடித்து வந்தது. ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற அளவில் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு, பிறகு அதனை தளர்த்திக் கொண்டது.

china children

இந்த நிலையில், மக்கள் தொகை வளர்ச்சி சரிவை சந்தித்திருப்பதால், எதிர்காலத்தில், தேவையான தொழிலாளர்கள் கிடைப்பதில் பிரச்னை ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால், மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில், சீனர்கள் விரைவாக திருமணம் செய்து கொள்ளவும், ஒரு தம்பதி குறைந்தது மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சீன அரசு வலியுறுத்தத் தொடங்கிவிட்டது.

ஆனால், கொரோனா மற்றும் பொதுமுடக்கம் காரணமாக, தங்களது நிலையில்லாத பொருளாதார வாழ்க்கையில், மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் என்பதால் அரசின் கொள்கை முடிவுக்க சீனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it