Theme Check

அடகு வைத்த பைக்கை மீட்க முடியவில்லை.. தாத்தா செயலால் தீயில் பற்றி எரிந்த பேரன்..

அடகு வைத்த பைக்கை மீட்க முடியவில்லை.. தாத்தா செயலால் தீயில் பற்றி எரிந்த பேரன்..

அடகு வைத்த பைக்கை மீட்க முடியவில்லை.. தாத்தா செயலால் தீயில் பற்றி எரிந்த பேரன்..
X

சேலம் அருகே அடமானம் வைத்திருந்த மோட்டார் பைக்கை மீட்டு தராததால் இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டி ஊராட்சி ஆட்டுக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் கோகுல்(20). இவரது தனது தந்தை மற்றும் தாய் இறந்துவிட்ட நிலையில் தனது தந்தை வழி தாத்தாவிடம் வசித்து வந்தார். இந்த நிலையில் தனது தாத்தாவிடம் பைக் வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 70,000 மதிப்புள்ள மோட்டார் பைக்கை அவரது தாத்தா வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் கை செலவிற்காக தாத்தா வாங்கிக் கொடுத்த மோட்டார் பைக்கை வேறு ஒரு இடத்தில் 5000 ரூபாய்க்கு அடகு வைத்துள்ளார் கோகுல்.

அடகு வைத்த பைக்கை மீட்க முடியவில்லை.. தாத்தா செயலால் தீயில் பற்றி எரிந்த பேரன்..

இதைத் தொடர்ந்து அடகு வைத்த மோட்டார் பைக்கை மீட்டுத் தரும்படி தன் தாத்தாவிடம் கேட்டுள்ளார். தாத்தா என்னிடம் பணம் இல்லை எனக்கூறி மறுக்கவே ஆத்திரமடைந்த இளைஞர் கோகுல் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தானே தீ வைத்துக் கொண்டார். இதில் வாலிபரின் உடல் முழுவதும் எரிந்து, வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அடகு வைத்த பைக்கை மீட்க முடியவில்லை.. தாத்தா செயலால் தீயில் பற்றி எரிந்த பேரன்..

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோகுல் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடமானம் வைத்த மோட்டார் பைக்கை மீட்டு கொடுக்காததால், வாலிபர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it