Theme Check

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பாட்டியை வெட்டிகொலை செய்த பேரன் !!

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பாட்டியை வெட்டிகொலை செய்த பேரன் !!

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பாட்டியை வெட்டிகொலை செய்த பேரன் !!
X

சாயல்குடி அருகே சொத்துக்காக பாட்டியை பேரனே வெட்டிகொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள மாரியூரைச் சேர்ந்தவர் மூதாட்டி மாரியம்மாள் (75). இவருக்கு சொந்தமான சொத்து விவகாரம் தொடர்பாக குடும்பத்தில் பிரச்னை நிலவி வருகிறது. குறிப்பாக மூதாட்டி மாரியம்மாளுக்கும் அவரது மணிபாரதி என்பவருக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் மூதாட்டி மாரியம்மாள், அவரது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது பேரன் மணிபாரதி திடீரென பாட்டியை தாக்கியுள்ளார். மேலும் அவர் சுதாகரிப்பதற்குள் தான் வைத்திருந்த அரிவாளால் மாரியம்மாளை பேரன் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

old

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர். எனினும் அங்கிருந்து மணிபாரதி தப்பியோடினார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாயல்குடி போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய பேரனை தேடி வருகின்றனர்.

சொத்துக்காக பாட்டியை பேரனே வெட்டிகொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it