Theme Check

முகூர்த்த நேரத்துக்கு வராத மாப்பிள்ளை.. திருமணத்துக்கு வந்தவரை கரம்பிடித்த மணப்பெண்

முகூர்த்த நேரத்துக்கு வராத மாப்பிள்ளை.. திருமணத்துக்கு வந்தவரை கரம்பிடித்த மணப்பெண்

முகூர்த்த நேரத்துக்கு வராத மாப்பிள்ளை.. திருமணத்துக்கு வந்தவரை கரம்பிடித்த மணப்பெண்
X

மணமகன் மேடைக்கு வருவதற்கு தாமதம் ஆனதால் திருமணத்துக்கு வந்திருந்த இளைஞர் ஒருவரை மணமகள் கரம்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா பகுதியில் இளம்பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. பெற்றோர் பேசி முடித்து திருமணத்துக்கு நல்லநேரம் குறித்து முடிவெடுத்தனர். அதாவது மாலை 4 மணிக்கு நல்லநேரம் என குறிப்பிட்டு திருமணம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அன்றைய தினம் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப்பட்டன. இதற்காக மணமகள் வீட்டார் குறித்த நேரத்துக்கு முன்பே மண்டபத்துக்கு சென்றுவிட்டனர். ஆனால், மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதாமதம் ஆனது. மணி 4, 5 என எட்டை எட்டியும் மணமகன் வந்து சேரவில்லை. இதனால், மணமகள் குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்தனர்.

sdf

அதேநேரத்தில், மண்டபத்தின் ஒருபுறத்தில் மணமகன் தனது நண்பர்களுடன் குடித்துவிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார். நண்பர்களும் குடிபோதையில் திளைத்து இருந்துள்ளனர். இதையெல்லாம் பார்த்த மணப்பெண் ஆத்திரம் அடைந்தார்.

இதன்பின்பு, போனால் போகட்டும் என்று குடித்துவிட்டு 8 மணிக்கு மண்டபத்திற்கு தனது நண்பர்கள் பட்டாளத்துடன் மணமகன் வந்து சேர்ந்துள்ளார். வந்த பின்பும் மணமகன் தோரணையை மட்டும் அவர் விடவில்லை. மணமகள் குடும்பத்தினருடன் சண்டை போட்டுள்ளார். இதனையெல்லாம் கவனித்த மணமகளின் தந்தை, மணமகனை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டார். திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்த நிலையில், திருமணத்திற்கு வந்த உறவுக்காரர் ஒருவரிடம் ஆலோசனை நடத்தி அவருக்கே தனது மகளை மணமுடித்து வைத்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

newstm.in

Tags:
Next Story
Share it