வீட்டு வாசலில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!! கட்டிப்பிடித்து அதிர வைத்த இளைஞர்!!
வீட்டின் முன்பு கட்டிப்பிடித்த இளைஞர்.. ஓராண்டாக இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!!

பெண் வங்கி ஊழியருக்கு சக ஊழியர் ஒருவர் ஒரு ஆண்டாக தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மும்பை மேற்கு அந்தேரியைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு, வங்கியில் நிகழும் மோசடி புகார்களை சரி செய்யும் பணியை மேற்கொள்ளும் துறையில் நியமிக்கப்பட்டார். அதே துறையில் 25 வயது இளைஞர் ஒருவர் பணி புரிந்து வந்தார். பணிக்கு சேர்ந்த மறுமாதமே அந்த பெண்ணிற்கு இளைஞர் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் கொடுக்க தொடங்கியுள்ளார். இதனை பொருத்துக் கொள்ள முடியாத அந்த பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரால் இளைஞரை பணியில் இருந்து நீக்கி வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
வேலையை இழந்தாலும் அப்பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதனால் அந்த பெண், இளைஞர் மீது மேலும் ஒரு புகாரை பதிவிட்டுள்ளார். இவற்றை சிறிதும் பொருட்படுத்தாமல், கடந்த பிப்ரவரி மாதம் 16 முதல் 20 வரையுள்ள கால இடைவேளியில் அப்பெண்ணுக்கு கைப்பேசி மூலம் குறுஞ்செய்திகளையும் அழைப்புகளையும் விடுத்து துன்புறுத்தி வந்துள்ளார். பயந்து போன அந்த பெண்மணி மூன்றாவது முறையாக காவல் துறையை நாடி புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து துன்புறுத்தி வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை, அந்த நபர் அப்பெண்ணின் வீட்டின் வெளியே நின்று அவரை வெளியே வரக் கூறி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். வீட்டின் வெளியே வந்த போது, வீட்டின் வாசலில் நின்ற இளைஞர் திடீரென அந்த பெண்ணை கட்டி அணைத்துள்ளார்.
இதனால் பதறிப் போன அந்த பெண் காவல்துறை எண்ணான 100க்கு கைப்பேசியின் மூலம் அழைத்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அந்த 25 வயது நபரை கைது செய்துள்ளனர்.
newstm.in