Theme Check

வெப்பமான ஏப்ரல்...122 ஆண்டுகளில் இல்லாத அளவில் கொளுத்திய வெயில் !!

வெப்பமான ஏப்ரல்...122 ஆண்டுகளில் இல்லாத அளவில் கொளுத்திய வெயில் !!

வெப்பமான ஏப்ரல்...122 ஆண்டுகளில் இல்லாத அளவில் கொளுத்திய வெயில் !!
X

கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே வெயில் சுட்டெறிக்க தொடங்கிவிட்டது. தமிழகத்திலும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் அக்னி நட்சத்திரம் என்னும் அதி தீவிர வெயில் வரும் நான்காம் தேதி தொடங்க உள்ளது. எனினும் அதற்கு முன்னதாகவே பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டிவதைத்து வருகிறது. மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

heat

அதேநேரத்தில், தமிழகத்தை விட இந்தியாவின் வட மேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த பகுதிகளில் கடந்த 122 ஆண்டுகள் இல்லாத அளவு ஏப்ரல் மாத வெப்பநிலை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது, ஜம்மு காஷ்மீர் முதல் பஞ்சாப், லடாக், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் கடந்த 122 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவு மிகவும் வெப்பமான ஏப்ரல் மாதத்தை எதிர்கொண்டன.

heat

மேலும் மத்திய இந்தியாவில் சராசரி அளவாக 37.78 டிகிரி செல்சியஸ் அளவும் வடமேற்கு இந்தியாவில் சராசரி அளவாக 35.9 டிகிரி செல்சியஸ் அளவும் வெப்பம் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3.35 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நாடு 1973, 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 122 ஆண்டுகளில் நடப்பு ஏப்ரல் மாதத்தில் பதிவான 35.05 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை என்பது 4ஆவது அதிகபட்ச வெப்பநிலையாகும்.

newstm.in

Tags:
Next Story
Share it