Theme Check

காத்திருக்க கூறியதால் மனைவியை கொன்ற கணவன்.. காட்டிக்கொடுத்த மகள்

காத்திருக்க கூறியதால் மனைவியை கொன்ற கணவன்.. காட்டிக்கொடுத்த மகள்

காத்திருக்க கூறியதால் மனைவியை கொன்ற கணவன்.. காட்டிக்கொடுத்த மகள்
X

பசிக்கும் நேரத்தில் உணவு இல்லையென மனைவியை கணவன் கொன்று புதைத்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தின் ஹத்பிப்லியா பகுதியில் தினேஷ் மாலி - யசோதா தம்பதி வசித்து வந்தனர். தினேஷ் மாலி தான் வசிக்கும் பகுதிலேயே பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை வழக்கம் போல வீடு திரும்பியுள்ளார். பசியுடன் வந்த தினேஷ் தனது மனைவி யசோதாவிடம் உணவு கேட்டுள்ளார்.

police

அப்போது வீட்டு வேலைகளில் பிசியாக இருந்ததாகவும், எனவே உணவு தயாரிக்க கொஞ்சம் கால தாமதம் ஆகும் எனக் கூறியுள்ளார். எனவே காத்திருக்கும்படி அவர் கூறியுள்ளார். ஆனால், வெளியில் இருந்து வந்த தினேஷ்க்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி தகராறு ஏற்பட்டது.

இந்த சண்டையை அவரது மகள் நிகிதா தடுக்க முயன்ற போதும் அவரால் ஏதும் செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில், ஆத்திரம் கொண்டு கையில் இருந்த கட்டையை வைத்து மனைவி யசோதாவை கணவர் தினேஷ் தாக்கியுள்ளார். தினேஷின் கொடூரமான தாக்குதலால் நிலை குலைந்து போன யசோதா ரத்தவெள்ளத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உடனடியாக மனைவியின் உடலை எடுத்த கணவர் தினேஷன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

police

இந்த சம்பவம் மகள் நிகிதா மூலம் அவர்களின் உறவினருக்கு தெரிய வரவே, அவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறை உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளது. இதை அடுத்து கணவர் தினேஷை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it