Theme Check

அம்மா வீட்டில் சேர்க்காததால் சின்னத்திரை நடிகர் தற்கொலை முயற்சி!!

அம்மா வீட்டில் சேர்க்காததால் சின்னத்திரை நடிகர் தற்கொலை முயற்சி!!

அம்மா வீட்டில் சேர்க்காததால் சின்னத்திரை நடிகர் தற்கொலை முயற்சி!!
X

வீட்டிற்குள் தனது தாய் சேர்க்கவில்லை என சின்னத்திரை நடிகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஆர்..புரம் பகுதியை சேர்ந்த ஜெரால்டு பெர்னான்டோ என்பவர் சின்னத்திரை மற்றும் நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். நடிக்க வாய்ப்புகள் கிடைக்காததால் காவலாளி வேலை பார்த்து வந்துள்ளார்.

இவருடைய தாயும், தந்தையும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தந்தையுடன் வசித்து வந்த ஜெரால்டு, அவர் இறந்த பிறகு தாய் ஜோஸ்மீன் கமலா வீட்டில் வசித்து வந்தர்.

தாயுடன் ஏற்பட்ட பிரச்னையால், வீட்டை விட்டு வெளியேறிய அவர் அதன் பின்னர் வீடு இல்லாமல் தவித்து வருந்துள்ளார். தாய் தன்னை வீட்டிற்குள் அனுமதிக்கவேண்டும் எனக் கோரி மயிலாப்பூர் காவல்நிலையத்தில் நான்கு முறை புகார் அளித்தார்.

suicide attempt

இந்த புகார் தொடர்பாக காவல்துறை பேச்சு வார்த்தை நடத்தியும் அவரது தாய் வீட்டிற்குள் அனுமதிக்காததால், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இடப்பிரச்னை இருக்கிற காரணத்தினால் நீதிமன்றத்தை நாடுமாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவலாளியாக வேலை பார்ப்பதால் வழக்கு நடத்த முடியாது எனக் கூறி தொடர்ந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

தாய் வீட்டிற்குள் சேர்க்காததால் மன உளைச்சலில் இருந்த ஜெரால்டு பெர்னான்டோ காவல் ஆணையர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். உடனடியாக அவரை காப்பாற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it