Theme Check

டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு.. இன்றே அமலுக்கு வருகிறது

டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு.. இன்றே அமலுக்கு வருகிறது

டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு.. இன்றே அமலுக்கு வருகிறது
X

தமிழகத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் மதுபானங்கள் சில்லறையாகவும் மொத்தமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுக்கு முன் தமிழகத்தில் மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், அனைத்து மதுபானங்களின் விலையும் உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, குவார்ட்டர் தற்போது விற்கும் விலையுடன் கூடுதலாக ரூ.10 உயர்ந்துள்ளது. பீர் பாட்டிலின் விலையும் அதிகரித்துள்ளது.

tasmak

அதாவது, குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.10, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.20, ஆஃப் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.20, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.40, புல் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.40, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.80 வரையும் விலை உயர்த்த பட்டுள்ளது.

பீர் வகைகளுக்கு ரூ.10 விலை உயர்ந்த பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஒரு நாளைக்கு மதுவகைகள் மூலம் ரூ 10.35 கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளது. பீர் வகைகள் மூலம் ஒரு நாளைக்கு 1.76 கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 4396 கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளது என்று தெரியவருகிறது.

புதிய விலைப்பட்டியலை இன்று காலை 8 மணி அளவில் மேற்பார்வையாளர்கள் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளவும். இன்று காலை 12 மணியளவில் கடை திறந்தவுடன் புதிய விலை பட்டியல் படி விற்பனை செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

tasmak

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக கடந்த 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் மதுவிலக்கு ஆயதீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

டாஸ்மாக் மதுபான விலை உயர்வால் குடிகாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it