சுங்கச்சாவடியில் இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம் !!
சுங்கச்சாவடியில் இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம் !!

இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 1- ந்தேதி முதல் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருந்தது. எனவே வாகன ஓட்டிகள் பாஸ்டேக் திட்டத்திற்கு மாற வேண்டும் எனவும் வலியுறுத்தியது.இதையடுத்து தமிழகத்தில உள்ள 75 சதவீத வாகனங்கள் பாஸ்டேக் திட்டத்திற்கு மாறி உள்ளன. 25 சதவித வாகனங்கள் கட்டணம் செலுத்தி சுங்கச்சாவடி மையத்தை கடந்து செல்கின்றன.
இந்நிலையில் சுங்கச் சாவடிகளின் அனைத்து வழித்தடங்களிலும் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு பிப்.15 நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் வழக்கமான கட்டணத்தை விட இருமடங்கு செலுத்த வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கான அவகாசம் நள்ளிரவுடன் முடியும் நிலையில் மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இனியும் கால அவகாசம் அளிக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த வசதியின் மூலமாக சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக, வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நேரம் வெகுவாகக் குறையும். அனைத்து சுங்கச் சாவடிகளிலும் இணையவழியிலும் வங்கிகள் மூலமாகவும் 'பாஸ்டேக்' விலையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.ஏற்கெனவே ஜனவரி 1-ம் தேதி முதல் வாகனங்களில் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், பிப்ரவரி 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

