வைரலாகும் கடைசி செல்பி.. அலையில் சிக்கி இளம்பெண் பலி !
வைரலாகும் கடைசி செல்பி.. அலையில் சிக்கி இளம்பெண் பலி !

தோழிகளுடன் சுற்றுலா சென்ற இளம்பெண் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
சென்னை அடுத்த மாதவரத்தை சேர்ந்த கமல் என்பவரின் மனைவி திவ்யா (22). இவர், கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி தனது தோழிகள் 6 பேருடன் சேர்ந்து மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றார். அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்த்த அவர்கள் பின்னர் கடலில் குளித்தனர். 6 பேரும் உற்சாக குளித்தப்போது திவ்யா மற்றும் ஜானகி (23) ஆகியோர் ராட்சத அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர்.

இதை பார்த்ததும் சக தோழிகள் கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக அங்கிருந்த மீனவர்கள் சிலர், கடலில் குதித்து இருவரையும் தேடினர். இதில் ஜானகியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் திவ்யாவை காணவில்லை.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள் திவ்யாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். உடனே அவர் கிடைக்காத நிலையில், பல மணி நேரத்துக்கு பிறகு திவ்யா சடலமாக கரை ஒதுங்கினார். போலீசார், சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சுற்றுலா சென்றப்போது கடலில் சிக்கி இளம்பெண் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புக்கு முன்பாக எடுத்த செல்பி புகைக்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
newstm.in

