Theme Check

பல ஆண்களை பெண்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கும் சட்டம் ! கடும் எதிர்ப்பு !!

பல ஆண்களை பெண்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கும் சட்டம் ! கடும் எதிர்ப்பு !!

பல ஆண்களை பெண்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கும் சட்டம் ! கடும் எதிர்ப்பு !!
X

உலக நாடுகளில் இருந்து சில நாடுகள் கொண்டிருக்கும் ஒருசில சட்டங்கள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அந்த வகையில் தென்னாப்பிரிக்கா உலகின் மிகவும் தாராளவாத அரசியலமைப்புகளில் ஒன்றாக உள்ளது. இங்கு ஒரே பாலின திருமணங்களையும், ஆண்கள் பலதார மணம் செய்து கொள்வதும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது.

இப்போது இதே உரிமை பெண்களுக்கும் வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது, பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களைக் வைத்துக்கொள்ள சட்டப்பூர்வ அனுமதி அளிக்குமாறு பாலின உரிமை ஆர்வலர்கள் அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளனர். எனினும் இதற்கு நாட்டின் பழமைவாதிகள், சில மதக் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் பாலிண்ட்ரி திட்டம் தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்பினர் கூறும் போது, இது ஆப்பிரிக்க கலாச்சாரத்தை அழித்துவிடும். அந்த மக்களின் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு? அவர்கள் அடையாளத்தை எப்படி அறிந்து கொள்வார்கள்? பெண் எப்போதும் ஆணின் ஆளுமையை எடுக்க முடியாது என கூறினார்.

அதேபோல், ஆப்பிரிக்க கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி, இஸ்லாமிய அல்-ஜமா கட்சி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஒரு பெண் பல கணவர்களை வைத்துக்கொள்ளும் பாலிண்ட்ரி சட்டம் குறித்து ஆய்வுகள் நடத்திய கல்வியாளர் பேராசிரியர் கொலிஸ் மச்சோகோ, பிபிசியிடம் கூறும் போது ஆப்பிரிக்க சமூகங்கள் உண்மையான சமத்துவத்திற்கு தயாராக இல்லை. எங்களால் கட்டுப்படுத்த முடியாத பெண்களை என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியாது என்று கூறினார்.

தென்னாப்பிரிக்காவில் இப்போது இந்த சட்ட விவகாரம் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it