Theme Check

சென்னையில் மிக நீளமான மேம்பாலம்.. திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!

சென்னையில் மிக நீளமான மேம்பாலம்.. திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!

சென்னையில் மிக நீளமான மேம்பாலம்.. திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!
X

மேடவாக்கம் பகுதியில், தாம்பரம் - வேளச்சேரி மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் பகுதியில், தாம்பரம் - வேளச்சேரி இடையே நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் 95.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். அதன் பின்னர், அந்த மேம்பாலத்தில் முதல்வர் மற்றும் அதிகாரிகள் காரில் பயணம் செய்தனர்.

2.03 கிலோ மீட்டர் நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்ட மேடவாக்கம் மேம்பாலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தற்போதைய பாலங்களில் மிக நீளமான மேம்பாலம் என கூறப்படுகிறது.

Next Story
Share it