Theme Check

நாட்டையே உலுக்கிய சம்பவத்தில் பரபரப்பு - முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!

நாட்டையே உலுக்கிய சம்பவத்தில் பரபரப்பு - முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!

நாட்டையே உலுக்கிய சம்பவத்தில் பரபரப்பு - முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!
X

ஹைதராபாத்தில் சைதாபாத் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த வாரம் வியாழக்கிழமை காலை காணாமல் போனார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதன்பின்னர் காவல்துறையினர் தேடியதில், அதேபகுதியில் வசித்து வந்த பள்ளக்கொண்டா ராஜு (30) என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது தெரியவந்தது. சிறுமியின் உடல் வெள்ளிக்கிழமை காலை குற்றவாளியின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜு


குற்றவாளி ராஜு தலைமறைவான நிலையில், உயிரிழந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. குற்றவாளியைப் பிடிக்க ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும், மதுக்கடைகளிலும் காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆங்காங்கே, தேடப்படும் நபர் என்று சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தது.

அத்துடன், பள்ளகொண்டா ராஜுவைப் பிடிக்க ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் தேடிவந்தனர். ஆனால் அவர் பிடிபடாததால், தகவல் தெரிவிப்பவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் எனவும் காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.

ராஜு


இந்நிலையில், தெலுங்கான டிஜிபி காரு, சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி பள்ளகொண்டா ராஜு, கன்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இறந்து கிடந்ததாகத் தெரிவித்திருந்ததாக தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் செயல் தலைவர் கேடிஆர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags:
Next Story
Share it