Theme Check

பெண்ணை வெட்டிய ஆண் நண்பர்.. ரத்தம் வடிய தெருவில் ஓடிய பெண்ணால் பரபரப்பு !

பெண்ணை வெட்டிய ஆண் நண்பர்.. ரத்தம் வடிய தெருவில் ஓடிய பெண்ணால் பரபரப்பு !

பெண்ணை வெட்டிய ஆண் நண்பர்.. ரத்தம் வடிய தெருவில் ஓடிய பெண்ணால் பரபரப்பு !
X

கணவரை இழந்த பெண்ணுக்கும், வேறுசில ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டதாக அவரை ஆண் நண்பர் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சோழாரஅள்ளியைச் சேர்ந்தவர் பார்வதி (40). கணவனை இழந்த பார்வதி தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (45 ) என்பவருடன் பார்வதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதில் முருகன் மனைவியை இழந்தவர் ஆவார்.

இதனால், முருகனுக்கும் பார்வதிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருக்கமானதால். இதன்காரணமாக இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் முருகன் வீட்டில் இல்லாத போது, வேறு சில ஆண்கள் வீட்டிற்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் கூறியதால் முருகனுக்குத் தகவல்கள் தெரியவந்தன.

kallakadhal

இதன்மூலம் சில ஆண்களுடன் பார்வதி நட்பில் இருப்பதாகவும் தெரியவந்ததால் முருகன் ஆத்திரமடைந்தார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் நடந்து வந்தன. வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகிலிருந்த கத்தியால் பார்வதியை முருகன் சரமாரியாக வெட்டினார்.

முதுகு மற்றும் தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்ததில் படுகாயமடைந்த பார்வதி, ரத்தம் வடிந்தப்படி அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதைப் பார்த்த முருகன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்

kallakadhal

ரத்த வெள்ளத்தில் தெருவில் விழுந்த பார்வதியை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மத்தூர் போலீசார், அதே பகுதியில் பதுங்கியிருந்த முருகனைக் கைது செய்தனர். ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டதால் ஆண் நண்பர் பெண்ணை கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


newstm.in

Next Story
Share it