பனைமரத்தில் பதநீர் எடுக்க ஏறிய நபர்.. திடீரென அறுந்து விழுந்த கயிறால் சோகம்..
பனைமரத்தில் பதநீர் எடுக்க ஏறிய நபர்.. திடீரென அறுந்து விழுந்த கயிறால் சோகம்..

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே உள்ள வெள்ளையம்பதியை என்னும் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்ற சென்னன் (38) பனைமரத்தில் ஏறி பதநீர் இறக்கும் தொழில் செய்கிறார். இவரது மனைவி சகுந்தலா(30). இவருக்கு 9 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். பல ஆண்டுகளாகப் பதநீர் இறக்கும் தொழில் செய்து வரும் சென்னன், வழக்கம் போல நேற்று மாலை படதாசம்பட்டி அருகே உள்ள பனந்தோப்பில் 50 அடி உயரமுள்ள பனைமரத்தில் ஏறியுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அவரின் காலில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்து விழுந்துள்ளது. இதனால் பனைமரத்தில் தடுமாறிய சென்னன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். தரையில் கிடந்த கற்கள் மீது விழுந்ததாலும் அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in



