முதலமைச்சர் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்த மனுஷன்- இப்போ ஊராட்சி மன்றத் தலைவரானார்.. ட்ரெண்டிங்கில் ரஜினி !

முதலமைச்சர் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்த மனுஷன்- இப்போ ஊராட்சி மன்றத் தலைவரானார்.. ட்ரெண்டிங்கில் ரஜினி !

முதலமைச்சர் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்த மனுஷன்- இப்போ ஊராட்சி மன்றத் தலைவரானார்.. ட்ரெண்டிங்கில் ரஜினி !
X

நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த பட டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டையில் வசிக்கும் காளையன் என்ற ஊராட்சி மன்றத் தலைவராக வருகிறார். ஆனால், எப்படி இருக்க வேண்டிய மனுஷன் இப்படியாகிவிட்டாரே என சமூக வலைதளங்களில் இது ட்ரெண்டிங்கில் உள்ளது.

இதோ வருகிறார் அதோ வருகிறார் என புலி வருது புலி வருது கதையாட்டும் கூறி கூறி அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர் நடிகர் ரஜினி. கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார்.

Rajinikanth

1996ஆம் ஆண்டிலிருந்தே அரசியலுக்கு வருவதாகச் சொல்லப்பட்டுவந்த ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

ஆனால், கட்சித் தொடங்காமலேயே இருந்த ரஜினி, ஜனவரியில் கட்சி தொடங்குவது உறுதி என்றும், அதற்கான தேதியை டிசம்பர் 31ஆம் தேதி (கடந்த ஆண்டு) அறிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். இதனால், அவரது ரசிகர்கள் உற்சாகமான நிலையில், அரசியலில் இருந்து விலகும் முடிவை அறிவித்து குட்-பை சொன்னது அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
Rajinikanth
இந்த நிலையில், சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளது. இதையொட்டி, படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில், “பெயர் காளையன், ஊரு சூரக்கோட்டை சுத்தியிருக்கிற எல்லா கிராமத்துக்கும் ப்ரெசிடென்ட்” என்று ரஜினி இன்ட்ரோ கொடுக்கப்படுகிறார். மேலும் அவர் மேஜையில் காளையன் ஊராட்சி மன்ற தலைவர் என்ற பெயர் பலகையும் இடம்பெற்றுள்ளது.

rajini arasiyal

முன்னதாக, ரஜினியின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் எழும்போதெல்லாம் அவருக்கு முதல்வர் ரேஞ்சுக்கு பில்-டப் கொடுக்கப்படும். ஆனால், அண்ணாத்த படத்தில் ஊராட்சி மன்றத் தலைவராக அவர் நடித்திருப்பதை சுட்டிக்காட்டி, நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதன் மூலம் தனது அரசியல் வருகை குறித்த ரசிகர்களின் கனவை அவர் பூர்த்தி செய்துள்ளார் என்றும் அவர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it