குழந்தைகளுக்கு அதிகம் பரவும் ஒமைக்ரான் வைரஸ்!!
குழந்தைகளுக்கு அதிகம் பரவும் ஒமைக்ரான் வைரஸ்!!

தென் ஆப்ரிக்காவில் ஒமைக்ரான் திரிபு குழந்தைகளுக்கு அதிக அளவில் பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒமைக்ரான் முதலில் கண்டறியப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு மிகவும் லேசான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பதால், அறிகுறிகள் லேசானதாக இருந்திருக்கலாம் என தென்னாப்பிரிக்க மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் தென் ஆப்ரிக்காவில் குழந்தைகளுக்கு ஒமைக்ரான் கொரானா திரிபு அதிக அளவில் பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவின் முதல் மூன்று அலைகளின் போது குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படவில்லை. தற்போது அதிக அளவிலான குழந்தைகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும் 15 முதல் 19 வயது வரை உள்ளவர்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சூழல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது முதல் தென் ஆப்ரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள் தோறும் இருமடங்காக அதிகரிக்கிறது. இது டெல்டா திரிபை விட பன்மடங்கு அதிகம் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பிரிட்டனில் 42 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பிரிட்டனில் 75 சதவிகிதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
newstm.in

