Theme Check

தமிழகத்தில் மிக முக்கிய அரசியல் பிரபலம் காலமானார்..!!

தமிழகத்தில் மிக முக்கிய அரசியல் பிரபலம் காலமானார்..!!

தமிழகத்தில் மிக முக்கிய அரசியல் பிரபலம் காலமானார்..!!
X

முற்போக்கு எழுத்தாளரான கு.சின்னப்ப பாரதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88.

இடதுசாரி சிந்தனைகளை கொண்ட எழுத்தளார் சின்னப்ப பாரதி இதுவரை தாகம், சர்க்கரை, பவளாயி, தலைமுறை மாற்றம், சுரங்கம், பாலை நில ரோஜா ஆகிய 7 நாவல்களை எழுதியுள்ளார். இவரது நாவல்கள் ஆங்கிலம், பிரெஞ்ச், டேனிஷ், சிங்களம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி என இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.

Chinnappa-bharathi

இவரது எழுத்திற்காக பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். அதாவது, இலங்கை முற்போக்கு வட்டம் வழங்கிய விருது, டெல்லி தமிழ்ச்சங்கம் விருது, கோவை உலகத் தமிழ் பண்பாட்டு மையம் வழங்கிய பொற்கிலி விருது, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி வழங்கிய பொற்கிழி விருது உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க விருதுகள் ஆகும்.

நாமக்கல்–மோகனூர் சாலை முல்லை நகர் பெந்தகோஸ்த் தேவாலயம் அருகில் மனைவி செல்லம்மாளுடன் வசித்து வந்த கு.சின்னப்ப பாரதி கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

RIP

இந்த நிலையில் நேற்று மாலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். இவருக்கு பாரதி, கல்பனா ஆகிய இரு மகள்கள் உள்ளனர். மறைந்த சின்னப்ப பாரதியின் உடல் நாமக்கல் மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.

Next Story
Share it