குடியரசு தின விழாவில் பங்கேற்போருக்கு மிக முக்கிய கட்டுப்பாடுகள் !!
குடியரசு தின விழாவில் பங்கேற்போருக்கு மிக முக்கிய கட்டுப்பாடுகள் !!

ஆண்டுதோறும் டெல்லியில் குடியரசு தின விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். இதில் பொதுமக்களும் கலந்துகொண்டு மிடுக்கான ராணுவ அணிவகுப்பு, வாகன ஊர்திகளை கண்டுவியப்பதுண்டு. அணிவகுப்பைப் பாா்வையிட சுமாா் 25 ஆயிரம் போ் வரை அனுமதிக்கப்படுவது வழக்கம்.
ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பைப் பார்வையிட அனுமதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கை 70- 80 சதவீதம் குறைக்கப்பட்டுவிட்டதாகவும், அந்த வகையில் 5,000 முதல் 8,000 போ் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அத்துடன் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெரியவா்களுக்கும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 15 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் அவா்கள் கூறினா். குடியரசு நாள் விழாவில் பங்கேற்க வருவோருக்கு முக்கிய அறிவுறுத்தல்களை டெல்லி காவல்துறை தனது அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், குடியரசு நாள் விழாவில் பங்கேற்க வருவோர், கட்டாயம் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும். 15 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு நிச்சயமாக அனுமதியில்லை.

பார்வையாளர்களுக்கான இருக்கைகள் காலை 7 மணி முதல் திறந்துவிடப்படும். எனவே அதற்கேற்ப வருகை தலாம்.
வாகன நிறுத்துமிடங்கள் மிகக் குறைவாக அனுமதிக்கப்பட்டிருப்பதால், பார்வையாளர்கள் குழுவாக சேர்ந்து ஒரே காரில் பயணிப்பது அல்லது வாடகைக் காரில் பயணிப்பது சிறந்தது.
பார்வையாளர்களை அனுமதிக்கும் முன்பு அடையாள அட்டை நிச்சயம் காண்பிக்கப்பட வேண்டும்.
கார் போன்ற வாகனங்களை நிறுத்துமிடத்தில், அதற்கான ரிமோட் சாவிகளை அங்கேயே ஒப்படைத்துவிட்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

