தாலி கட்டும் நேரத்தில் மணமகனை செருப்பால் அடித்த தாய்.. வைரல் வீடியோ !!
தாலி கட்டும் நேரத்தில் மணமகனை செருப்பால் அடித்த தாய்.. வைரல் வீடியோ !!

திருமண நிகழ்ச்சி மணமேடைக்கு சென்று மணமகனை அவருடைய தாயார் திடீரென செருப்பால் அடித்த சம்பவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் வழக்கமான உற்சாகத்துடன் இளம்ஜோடிகளுக்கு திருமணம் விழா நடைபெற்றது. உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. சுழலும் மேடை ஒன்றின் மீது மணமகனும், மணமகளும் அமர்ந்திருக்க அவர்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.
அப்போது புகைப்பட கலைஞர்களும், வீடியோ கேமராமேன்களும் திருமண விழாவை படம்பிடித்துக் கொண்டிருந்தனர். மணமகனும், மணமகளும் இருந்த சுழலும் மேடைக்கு படி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென பெண் ஒருவர் சுழலும் மேடைக்கு ஏறினார். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக மணமகள் அருகில் இருக்கும்போதே திடீரென மணமகன் மீது செருப்பை கழற்றி வீசியிருக்கிறார். பின் அவரை சரமாறியாக வசைபாடியிருக்கிறார். மேலும் அந்த சுழலும் மேடையையும் சேதப்படுத்தியிருக்கிறார். இந்த மொத்த நிகழ்வையும் அங்கு கூடியிருந்த விருந்தினர்கள் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பின்னர் அங்கிருந்தவர்கள் அப்பெண்ணை வெளியே பிடித்து இழுத்தனர். ஆனால் அதன் பின்னர் தான் தெரிந்தது தாக்குதலில் ஈடுபட்டவர் மணமகனின் தாயார் என தெரியவந்தது. இதனால் ஒட்டுமொத்த திருமண அரங்கமே அதிர்ந்தது.

அதாவது, அந்த திருமண ஜோடிகள் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இத்திருமணத்தை பெண்ணின் தந்தையே நடத்தி வைக்க நினைத்திருக்கிறார். எதிர்ப்பு காரணமாக அவர் மணமகனின் வீட்டார் யாரும் திருமணத்துக்கு வரவில்லை.
#A4Times#हमीरपुर
— A4Times (@a4_times) July 4, 2021
दूल्हे की माँ ने जयमाल के वक्त बेटे पर चप्पल से किया हमला, वीडियो वायरल,
माँ को यह रिश्ता मंज़ूर नहीं था,
सुमेरपुर थाना क्षेत्र में एक मैरेज हाल का है वीडियो.#ViralVideo #marriage pic.twitter.com/sVO6pDSndr
இந்த நிலையில் மணமகனை அவரது தாயார் தாக்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
newstm.in

