Theme Check

திரைப்படமாகும் 'தாதா' கங்குலியின் வாழ்க்கை வரலாறு !!

திரைப்படமாகும் 'தாதா' கங்குலியின் வாழ்க்கை வரலாறு !!

திரைப்படமாகும் தாதா கங்குலியின் வாழ்க்கை வரலாறு !!
X

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது.

இந்திய அணிக்கு 10 ஆண்டுகள் கேப்டனாக இருந்த கங்குலியின் பொற்காலம் என்று கூறலாம். ஏனெனில் அப்போது தான் இந்திய அணி பெரும் வளர்ச்சியை பெற்றது. ரசிகர்களால் கொல்கத்தாவின் இளவரசர், தாதா என்று அழைகக்படும் கங்குலியை, ராகுல் திராவிட் “ காட் ஆஃப் ஆஃப்சைட்” என்று அழைப்பார். கங்குலி ஆஃப் சைடில் ஷாட்களை அடிக்கும் அழகை அவர் அவ்வாறு அழைத்தார்.

Sourav-Ganguly

கேப்டன்ஷிப்பும், பேட்டிங்கும் கங்குலியிடம் தனித்தன்மை வாய்ந்தது. கடந்த 1996ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தவர் கங்குலி. 2ஆவது டெஸ்ட்டிலும் சதம் அடித்து அனைவரையும் கங்குலி வியப்புக்குள்ளாக்கினார். 1997ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 4 முறை ஆட்ட நாயகன் விருதை கங்குலி வென்றுள்ளார்.

2000ஆம் ஆண்டில் இந்திய அணிக்குள் மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்தவுடன் கங்குலி கேப்டன்ஷிப் பொறுப்பேற்றார். மிகவும் நெருக்கடியான நேரத்தில் இந்திய அணிக்குத் தலைமை ஏற்று வழிநடத்தினார். கங்குலி தலைமையில்தான் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், முகமது கைஃப், தோனி, ஆஷிஸ் நெஹ்ரா, ஜாகீர்கான் போன்ற ஜாம்பவான்கள் அடையாளம் காணப்பட்டனர்.

Sourav-Ganguly

அப்போது பெரும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியையும் சொந்த மண்ணில் வைத்து 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது கங்குலி தலைமைதான். இதுவரை கங்குலி 113 டெஸ்ட், 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒட்டுமொத்தமாக 18,575 ரன்கள் சேர்த்துள்ளார். இந்திய அணிக்கு 195 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த கங்குலி அதில் 97 போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.

Sourav-Ganguly

இந்த நிலையில், தனது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகப் போகிறது என்பது குறித்து கங்குலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய வாழ்க்கை, நம்பிக்கை, முன்னோக்கி நகர்வதற்கான தன்னம்பிக்கையை அளித்தது கிரிக்கெட்தான். அந்தப் பயணம் அழகானது. என்னுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக லவ் பிலிம்ஸ் எடுப்பது த்ரில்லானது எனத் தெரிவித்துள்ளார். இந்தத் திரைப்படத்தை லவ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


newstm.in

Tags:
Next Story
Share it