கொரோனா 3ஆவது அலையில் அடுத்த 100- 125 நாட்கள் மிகவும் முக்கியமானவை.. மத்திய அரசு எச்சரிக்கை !
கொரோனா 3ஆவது அலையில் அடுத்த 100- 125 நாட்கள் மிகவும் முக்கியமானவை.. மத்திய அரசு எச்சரிக்கை !

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பாதிப்புகளை கட்டுப்படுத்தி வந்தாலும் முழுமையாக முடிவுக்கு கொண்டுவரவில்லை. நாடு முழுவதும் சராசரியாக நாள்தோறும் 40 ஆயிரத்தை நெருங்கியே கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. எனினும் கொரோனா பாதிப்பு பரவலை முடிவுக்கு கொண்டு வர இந்தியா தீவிரமாக போராடி வருகிறது.
கடுமையான ஊரடங்குடன் கட்டுப்பாடுகளை விதித்திருந்த மாநில அரசுகள் அடுத்தடுத்து தளர்வுகள் அளித்து வருகிறது.

ஆனால் கடந்த 15ஆம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டுமே தினசரி பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. மணிப்பூர், கேரளா, ராஜஸ்தான், மேகாலயா, மிசோரம், அருணாசலபிரதேசம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, அசாம், மராட்டியம், புதுச்சேரி அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கூறியுள்ள நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் கூறுகையில், கொரோனா தடுப்பூசிகள் வலிமை வாய்ந்தவை, மிகவும் பாதுகாப்பானவை. இணை நோயுடன் போராடுகிறவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும், கொரோனா விவகாரத்தில் அடுத்த 100-125 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்று கூறினார். மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். தொற்று எண்ணிக்கை சரிந்து வருவது குறையத்தொடங்கியுள்ளது. இது ஒரு எச்சரிக்கையாகும். எனினும், தற்போது கொரோனா நிலவரம் கட்டுக்குள் உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றினால் மூன்றாவது அலை நம்மை தாக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
newstm.in

