Theme Check

பொதுமக்களுக்கு அடுத்த தலைவலி.. அதிகரிக்கப்போகுது ஆட்டோ கட்டணம்..!

பொதுமக்களுக்கு அடுத்த தலைவலி.. அதிகரிக்கப்போகுது ஆட்டோ கட்டணம்..!

பொதுமக்களுக்கு அடுத்த தலைவலி.. அதிகரிக்கப்போகுது ஆட்டோ கட்டணம்..!
X

கடந்த 35 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்றாலும், ஏற்கனவே பெட்ரோல் விலை 110 ரூபாயையும், டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டி உள்ளது வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் விரைவில் புதிய ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்ய போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி நிர்ணயம் செய்ய ஆட்டோ ஓட்டுனர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கையை ஏற்ற போக்குவரத்துத்துறை, வரும் வெள்ளிக்கிழமை அன்று ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story
Share it