Theme Check

அடுத்த அதிர்ச்சி! நடிகையின் தோழியும் தற்கொலை!!

அடுத்த அதிர்ச்சி! நடிகையின் தோழியும் தற்கொலை!!

அடுத்த அதிர்ச்சி! நடிகையின் தோழியும் தற்கொலை!!
X

நடிகை பிதிஷா டி மஜூம்தார் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் மன உளைச்சலில் இருந்த அவரது தோழியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா நகரின் நாகர்பஜார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிதிஷா டி மஜூம்தார் (21) என்ற நடிகை வசித்து வந்தார். பிரபல மாடலான இவர் வங்காள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 25ஆம் தேதி தனது குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குள் அந்த நடிகையின் தோழியும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

bidisha

கொல்கத்தா படோலி பகுதியைச் சேர்ந்த மஞ்சுஷா நியோகி(21) தற்கொலை செய்து கொண்ட நடிகை பிதிஷா டி மஜூம்தாரின் நெருங்கிய தோழி. கடந்த மூன்று ஆண்டுகளாக இவர்கள் நண்பர்களாக இருந்துள்ளனர். அத்துடன் பிதிஷாவுடன் இணைந்து தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வந்தார்.

இந்த நிலையில் பிதிஷா தற்கொலை செய்து கொண்டதால் மஞ்சுஷா மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது வீட்டில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Manjusha-Neogi

மேற்கு வங்கத்தில் கடந்த 15 நாட்களுக்குள் நடிகைகள் பல்லவி டே, பிதிஷா, மஞ்சுஷா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it