ஜனவரி 20 வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும்.. அரசு அறிவிப்பு..!
ஜனவரி 20 வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும்.. அரசு அறிவிப்பு..!

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழலில் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதனைத்தொடர்ந்து, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, திரிபுராவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திரிபுராவில் நாளை இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த ஊரடங்கு ஜனவரி 20-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திரையரங்குகள், விளையாட்டு அரங்குகள், பொழுதுபோக்கு பூங்கா, பார்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

