Theme Check

நோபலுக்கு இணையான பரிசு ! கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு காரணமான தமிழருக்கு கௌரவம் !!

நோபலுக்கு இணையான பரிசு ! கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு காரணமான தமிழருக்கு கௌரவம் !!

நோபலுக்கு இணையான பரிசு ! கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு காரணமான தமிழருக்கு கௌரவம் !!
X

டிஎன்ஏ ஜீனோம் ஆராய்ச்சியில் புதிய முறையை அறிமுகப்படுத்தி, டிஎன்ஏ ஆராய்ச்சியை எளிமைப்படுத்தியதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஷங்கர் பாலசுப்ரமணியன் மற்றும் டேவிட் க்ளேனர்மேன் இருவருக்கும் 2020ஆம் ஆண்டுக்கான மில்லினியம் டெக்னாலஜி பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஷங்கர் பாலசுப்ரமணியன் சென்னையை பூர்வீகமாக கொண்ட தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. பினாத்தில் இருந்து டெக்னாலஜி அகாடமி பின்லாந்து என்ற அமைப்பு மூலம் கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மில்லினியம் டெக்னலாஜி பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

உலக அளவில் டெக்னலாஜி துறையில் புதிய கண்டுபிடிப்புகளை கௌரவிக்கும் விதமாக அதனை படைப்பாளிகளுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது இது டெக்னாலஜி துறையில் நோபலுக்கு இணையானதாக பார்க்கப்படுகிறது.

எவ்வளவு இந்த பரிசை வென்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஷங்கர் பாலசுப்ரமணியன் மற்றும் டேவிட் க்ளேனர்மேன் இருவருக்கும் 1.22 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 27 வருட ஆராய்ச்சிக்கு பின் இவர்கள் இந்த பரிசை பெற்றுள்ளது. பொதுவாக மனிதர்கள் தொடங்கி பல உயிரினங்கள், வைரஸ்களில் டிஎன்ஏ ஆராய்ச்சியை மேற்கொள்ள பழைய பாரம்பரிய முறைதான் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இவர்களின் டிஎன்ஏ ஆராய்ச்சிதான் கொரோனா வேக்சின் ஆராய்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது. Next Generation DNA Sequencing (NGS ) என்று அழைக்கப்படும் டிஎன்ஏ ஆராய்ச்சி முறையில் இவர்கள் நிகழ்த்திய கண்டுபிடிப்பு மூலம் டிஎன்ஏ ஆராய்ச்சி எளிதானது. அதாவது ஒரு டிஎன்ஏவை ஜீனோமை ஒரே நாளில் ஆராய்ந்து அதன் பண்புகள், செயல்பாடுகள், ஆற்றல்கள் என் என்று அனைத்து விதமான விஷயங்களையும் ஒரே நாளில் கண்டுபிடிக்க முடியும்.

இந்த என்ஜிஎஸ் முறை கண்டுபிடிப்பு தான் தற்போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பயன்படும் தடுப்பூசிகளை விரைவாக கண்டுபிடிக்க உதவியது. இத்தகைய பெருமைமிக்க செயலில் ஈடுபட்ட தமிழர் ஷங்கர் பாலசுப்ரமணியத்திற்கு பாராட்டு குவிந்து வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it