Theme Check

தலீபான்கள் கையில் சிக்கும் அணு ஆயுதம் ?- உலக நாடுகள் அச்சம் !

தலீபான்கள் கையில் சிக்கும் அணு ஆயுதம் ?- உலக நாடுகள் அச்சம் !

தலீபான்கள் கையில் சிக்கும் அணு ஆயுதம் ?- உலக நாடுகள் அச்சம் !
X

தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் அவர்களிடம் அணு ஆயுதங்கள் சிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அச்சம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தற்போது தலீபாகள் கைவசம் வந்துள்ளது. தலைநகர் காபூலை கைப்பற்றிய அடுத்த நிமிடமே அதிபர் நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது அந்நாட்டிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். அமெரிக்க ராணுவமும் இந்த மாத இறுதிக்குள் மொத்தமாக வெளியேற உள்ளது.

joe bidens

இந்நிலையில் தலீபான்கள் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை பெற திட்டமிட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, தலீபான் அமைப்பு மற்றும் அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரி ரகசிய சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. அப்போது பல்வேறு நிலைபாடு குறித்து அமெரிக்கா தலீபான்களுக்கு வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.

joe bidens

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற விவாதத்தில் தலீபான்கள் பாகிஸ்தானை கைப்பற்றும் அபாயம் உள்ளதாகவும், அப்படி கைப்பற்றினால் அங்குள்ள அணு ஆயுதங்கள் அவர்கள் வசம் செல்லும் என கூட்டிக்காட்டப்பட்டது. அப்படி ஒருவேளை அணு ஆயுதம் தலீபான்கள் வசம் சென்றதால் உலகளவில் பெரும் அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே தலீபான்கள் கையில் அணு ஆயுதம் கிடைக்காமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஜோ பிடனிடம் செனட் சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


newstm.in

Tags:
Next Story
Share it