திருப்பதியில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது! தேவஸ்தானம் கவலை!
திருப்பதியில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது! தேவஸ்தானம் கவலை!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்பு அதிதீவிரமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் முழு ஊரடங்கை அறிவிக்கும் எண்ணம் இல்லை என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில் மாநிலங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. ஏற்கனவே திருப்பதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் திருப்பதியில் தரிசனம் செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 472 பேர் மட்டுமே.
சித்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆந்திரா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.
newstm.in

